Breaking News

சீத்தாப்பழமும், மருத்துவக்குணமும்..!


பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.

பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் டீ தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.

எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீத்தாப்பழ ஒயின்:
நன்கு கனிந்த சீதாப்பழத்தில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டது.
Read more ...

குரூப் 1 தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது..! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!


குரூப் 1 தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 19-ம் தேதி மூன்று கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்திருந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க,‌ விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 8- ஆம் தேதியே கடைசி நாளாக அறிவித்திருந்தது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட செய்திகுறிப்பில், விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்னரே போதிய கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னையோ எழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் ‌சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read more ...

சுவிஸ் ரகசிய வங்கி கணக்குகளின் மர்மம் விலகுகிறது..!


சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள வெளிநாட்டினர்களின் பணம் தொடர்பான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் பகிர்ந்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக சுவிஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் செய்து சட்டத்திற்கு விரோதமாக சேமித்த பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வருவதால் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகின்றன.

மேலும், இதுபோன்ற முறைகேடாக பணம் பதுக்கியுள்ளவர்களை பற்றி தகவல்களை சுவிஸ் அரசு தர மறுத்து வந்ததால் அந்நாட்டு அரசு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வந்துள்ளது.

இந்நிலையில், சுவிஸ் வங்கியில் உள்ள ரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்ள தயார் என சுவிஸ் அரசு தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

சுவிஸ் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் AEOI-ன் விதிமுறைகள் அடிப்படையில் அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, உருகுவே, இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை தொடர்பான செயல் திட்டங்கள் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், இதற்கு ஒரு ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திடம் ரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்கள் பகிர்ந்துக்கொள்ளப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கணக்குகள் தொடர்பான மர்மம் விலக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ...

கோவைலிருந்து லண்டனுக்கு காரில் செல்லும் பெண்கள்..!


தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவாட்டத்திலிருந்து 4 பெண்கள் நாட்டின் 70வது சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாடுவதற்காக காரிலேயே லண்டன் செல்ல உள்ளனர். மார்ச் 26ம் தேதி தங்களின் பயணத்தை தொடக்கும் இந்த பெண்கள் குழுவினர் 70 நாட்களில் லண்டனை அடைய உள்ளனர்.

கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் என்ற பெண் அங்கு உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு காரில் நீண்டதூர பயணம் செய்வது என்றால் அலாதி பிரியம்.

இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன்னர் காரிலேயே தாய்லந்து நாட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்த கார் பயணத்தில் சீனா, மியான்மர், ரஷ்யா, போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக சென்று லண்டனை அடைய உள்ளனர். இந்த பயணத்திற்காக 9 விதமான விசாக்களை இவர்கள் பெற வேண்டி உள்ளது. நாள் ஒன்றிற்கு 500 கி.மீ. என்ற வீதத்தில் இவர்களின் பயணம் அமைய உள்ளது. மொத்தம் 24,000 கி.மீ. பயணிக்க உள்ளனர். இதற்கான மொத்த செலவு ரூ.60 இலட்சம்.

இந்தப் பயணம் மேற்கொள்ளும் 4 பேரும் காரோட்டுவதில் கைதேர்ந்தவர்கள். தற்போது பலதரப்பட்ட தட்பவெப்பநிலை, வீதிகளில் காரை இயக்க சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

பயணம் தொடர்பாக கோவையை சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் கூறுகையில், மார்ச் மாதத்தில் கிர்கிஸ்தானில் பனிப்பொழிவு இருக்குமா என்பது பற்றி இப்போது உறுதியாக கூற முடியவில்லை. மியான்மர் செல்லும்போது, அந்நாட்டு இராணுவம் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என நம்புகிறோம் என்றார்.
Read more ...

"நாடா" புயல்...


வடகிழக்குப் பருவமழை தொடங்கி இந்த ஆண்டு சரியான மழை அளவு பதிவாகவில்லை. இந்த நிலையில் கடந்த 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புதன்கிழமை காலையில் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கடலூருக்கு அருகே புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னைக்கு 830 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 45 வது முறையான உருவான புயலுக்கு நாடா என்று ஓமன் நாடு பெயரிட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக புதன்கிழமை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டிசம்பர் 2ம் தேதி புயல் கடலூருக்கு அருகே கடக்கும் போது பல பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
Read more ...

சிறுநீரக கோளாறு ஏன் ஏற்படுகிறது..? எப்படி தடுப்பது..?

நீங்கள் 10 அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு (KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி, கணுக்கால் எலும்பில் வலி, குதிங்கால் வலி), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும் அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும். அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது (தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது, இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது). எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது. நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன. விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

"இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்"
Read more ...

பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை..!


தீபாவளி பண்டிகையின் போது, டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக, அங்கு கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டது. இதனால் 2 வாரங்களுக்கும் மேலாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். 

இதையடுத்து, சுற்றுச்சூழலை சீர்படுத்தும் முயற்சிகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம், டெல்லி மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், டெல்லி மற்றும் புறநகரில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பொதுநலன் வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாசு விற்பனை உரிமங்களை ரத்து செய்யவும், புதியதாக பட்டாசு விற்பனை உரிமங்கள் வழங்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை, டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more ...

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது..!


செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை, வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு கணக்கு கேட்கப்படும் என்றும், உரிய கணக்கு காட்டாவிட்டால், வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில் 200 சதவீத அபராதம் விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இருப்பினும் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தியவர்களுக்கு 50 சதவீதம் வருமான வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், வருமான வரி போக மீதியுள்ள தொகையில், பாதிப் பணத்தை 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது என்ற கட்டுப்பாட்டையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

குடியரசுத் தலைவரின் சம்மதத்தை பெற்ற பிறகு, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில், சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more ...
Copyright © 2016.. Muhanool